புதன், 27 பிப்ரவரி, 2013

இன்றைய புத்தகம்

கள்ளிக்காட்டு இதிகாசம்,   கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உலகத்தர இலக்கியம்.எளிய மனிதர்களின் வாழ்வையும்,வாழ்வின் அவலங்களையும் அழிவையும் விவரிக்கும் காவியம்.இதே போன்ற கதைக் கருக்களால் பெரும் புகழடைந்த ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா அச்சிபியின் எழுத்துக்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல நம்மவரின் படைப்பு.ஆனால் அசாதாரணமான இந்த படைப்புக்கு நாம் சாதாரண அங்கீகாரம் கூட வழங்கவில்லை.வேதனை.

சனி, 2 பிப்ரவரி, 2013

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் தொடர்ச்சி

1. அணிலாடும் முன்றில்-      உறவுகளையும் உறவுப் பிணைப்புகளையும் பற்றிய ஒரு அழகிய படைப்பு,நா.முத்துக்குமாரின் அழகிய தமிழ் நடையில், படிப்பவரை நிச்சயம் கவரும்.
2.துணையெழுத்து  - எஸ்.ராமகிருஷ்ணனின் வாழ்வியல் அனுபவ கட்டுரைகள், அவருக்கு மட்டுமே உரித்தான சிலிர்க்க வைக்கும் மொழி நடையில், இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு சிறந்த அனுபவம்.
3.வட்டியும் முதலும் - ராஜு முருகனின்  இயல்பான நேரடியான வார்த்தைகளில் மக்களின் யதார்த்த வாழ்வை கண் முன் நிறுத்தும் நூல்.நேரடியான வாழ்வனுபவத்தை குறைவின்றி கொடுக்கும்.
4. கற்றதும் பெற்றதும் - சுஜாதாவின் விஞ்ஞானப் பார்வையில் அமைந்த படைப்பு, அன்றாட நிகழ்வுகளையும் அவர் அறிந்து கொண்ட புதியனவற்றையும் எளிய நடையில் விவரிக்கும் புத்தகம்
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியனின் தெள்ளிய கருத்து விளக்கங்களுடன் சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள்,வற்புறுத்தலான தொனியுடன் நம்மை சிந்திக்க வைக்கிறது.
6.கிமு கிபி - மதனின் வரலாற்றுப் பார்வையும் சமூக நோக்கியலும் கலந்த எழுத்துக்கள் படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும்,நிகழ்வுகளயும் பிண்ணனிகளையும் ஆராய்கிறது இப்புத்தகம்.
7.சாட்சி மொழி - ஜெயமோகன் தன் கருத்தியலையும், தன் விமர்சனங்களையும், தன் மீதான விமர்சனங்களுக்கான பதில்களையும் ஆணித்தரமாக விளக்கும் புத்தகம்,இதை வாசித்தால் அவர் கொணடாடப்படுவதற்காண காரணம் புரியம்.
8.ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் -சி.மகேந்திரனின் சூழலியல் கட்டுரைகள் நம்மால் கவனிக்கப் படாத பெருங் கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு உன்னத முயற்சி
9.ஓடும் நதியின் ஓசை - இறையன்புவின் வாழ்வியியல் கட்டுரைகள், புத்துலகிற்கு இளம் தலைமுறையை வழிகாட்டி அழைத்துச் செல்லும் விவேகமிக்க கருத்துகள் நிறைந்த புத்தகம்.
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - உலகம் கவனிக்க மறுத்த மனித இனம் அவமானப் பட வேண்டிய மனிதப் பேரவலத்தை சி.மகேந்திரன் தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்