சனி, 17 ஆகஸ்ட், 2013
தமிழ் குரல்: வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe)
தமிழ் குரல்: வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe): மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆப்ரகாம் நடித்து தயாரித்துள்ள இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தமிழ் நாட்டிலுள்ள பல...
வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe)
மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆப்ரகாம் நடித்து தயாரித்துள்ள இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தமிழ் நாட்டிலுள்ள பல இயக்கங்கள் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையை பிண்ணனியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இதுபோல எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் தமிழகத்தில் விடுதலைபுலிகளுக்கான ஆதரவையோ, தனி ஈழத்துக்கான ஆதரவையோ துளியும் பாதிக்காது என்றாலும் வட இந்தியாவிலும் மற்றும் உலகெங்கும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தி மொழி பேசும் மக்களிடம் தவறான அரைகுறை புரிதலை உருவாக்கும் என்பது கவலை அளிக்கிறது.வட இந்திய ஊடகங்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் கலைத்துறையினர் என அனைவரும் தமிழ் மக்களின் உணர்வுகளை சிறிதும் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி தொடர்ந்து தமிழ் உணர்வுகளை புண்படுத்துவது பெரும் ஆபத்திற்கு இட்டுச் செல்லலாம். தேச நலன் தேச ஒற்றுமை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக கொண்ட இந்த கும்பல்களுக்கும் மும்பை நிழலுலக தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்பு ஊரறிந்த ரகசியம்.இவர்கள் இந்தியாவைக் காக்கும் தியாகிகளாம், தமிழர்கள் தீவிர வாதிகளாம், நல்ல கற்பனைதான். இந்த நீதிமான்கள் ராஜீவ் கொலையால் அதிகம் ஆதாயமடைந்தது யார் என்பதையும் பதிவு செய்தால் இவர்களை பாராட்டலாம்.ஒட்டுமொத்த உலகும் இனப்படுகொலைக்காக இலங்கையை கண்டித்த போது கொழும்பு நகரில் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் கலை வளர்த்த அறிவு ஜீவிகளல்லவா இவர்கள்! தமிழில் தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை படத்திற்கு ஏற்பட்ட தடங்கல்களும் இடைஞ்சல்களும் மெட்ராஸ் கபே வுக்கு ஏற்படாதது இந்த படம் ஒரு அரைவேக்காட்டு அதிமேதாவித்தன பிதற்றல் தானோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. காத்திருப்போம்.
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
காலித் ஹுசைனியின் ( Khaled Hosseini ) ஆப்கானிஸ்தான்
காலித் ஹுசைனியின் ஆப்கானிஸ்தான்
சமகால இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவர் எழுதிய A Thousand Splendid Suns, The Kite Runner, And The Mountains Echoed ஆகிய மூன்று புத்தகங்களும் அழிவின் வேதனையால் துவழும் ஆப்கானிஸ்தானின் அவலங்களை கண்முன் நிறுத்துகின்றன. ஆதிக்க போரில் ஈடுபடுவோரின் வாதங்களையோ,எதிர்ப்பவர்களின் வாதங்களையோ சார்ந்திருக்காமல்,போரால் அல்லல் படும் அப்பாவி மக்களின் அவலத்தை கண்முன் கொண்டு வருகிறது இவரது எழுத்து.தெளிந்த மொழிநடை மற்றும் நிகழ்கால மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதை அமைப்பும் இவரது சிறப்புகள்.
சினிமா விமர்சனம்
சென்னை எக்ஸ்பிரஸ்
இந்தியில் இந்த படம் பிரமாண்ட வெற்றியாம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என்று ஊடகங்கள் கணிக்கின்றன. என்ன ரசனையோ போங்க.
இந்த படத்திற்கு எனது மதிப்பீடு : குப்பை
கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்திலும் சொதப்பி மரண மொக்கையான ஒரு படத்தை எடுத்துவிட்டு விளம்பரம் செய்து படத்தை ஓட்டி விடலாம் என நினைக்கும் யுடிவி நிறுவனத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.முத்து படத்தில் நாம் பார்த்த காமெடி,மறறும் பல தெலுங்கு படங்களின் சண்டை காட்சிகள் என மூன்றாந்தர படங்களை விட கேவலமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குப்பை படத்தில் இலங்கை, டீசல் கடத்தும் தமிழர்கள் என்று அரசியல் அலசும் அரைவேக்காட்டு பிதற்றல்கள் வேறு.
அட கடவுளே,இதற்கெல்லாம் நிறைய விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.இந்தியில் இந்த படம் பிரமாண்ட வெற்றியாம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என்று ஊடகங்கள் கணிக்கின்றன. என்ன ரசனையோ போங்க.
இந்த படத்திற்கு எனது மதிப்பீடு : குப்பை
வெள்ளி, 19 ஜூலை, 2013
ஆங்கில நாவல்கள்
புகழபெற்ற சில ஆங்கில நாவல்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன் மிகச்சிறந்த இலக்கிய தரமும் உறுதியான கதைககருக்களும் இவற்றின் சிறப்பு.
1. Heart of Darkness - Joseph Conrad
2. Lord of the Flies - William Golding
3. Tale of Two Cities - Charles Dickens
4.1984 - George Orwell
5.Animal Farm - George Orwell
6. The Sound and Fury - William Faulkner
7.The Great Gatsby- Fitgerald
8. Pride and Prejudice- Jane Austen
9.Jane Eyre - Charlote Bronte
10.The Catcher in the Rye- J.D.Salinger
1984 மற்றும் Animal Farm இரண்டுமே அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஆர்வல், பொதுவுடமைவாதத்திற்கு எதிரான கருத்துக்களை Animal Farm லும் முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்துக்களை 1984 லும் வெளிப்படுத்திஇருக்கிறார்.அமெரிக்காவை குறிக்கும்" Big Brother is Watching You' என்ற சொற்றொடர் மிகவும் புகழ் பெற்றது
கீழே உள்ளவை சமீபகாலத்தில் மிகவும் புகழ் பெற்ற சில நாவல்கள், முக்கியமாக இவை பிற நாட்டவரால் எழுதப்பட்டவை.
1. Midnight's Children - Salman Rushdie
2.One Hundred Years of Solitude- Gabriel Garcia Marquez.
3.Thousand Splendid Suns- Khaled Hosseini
4.The House for Mr.Biswas- V.S. Naipaul
5. Things Fall Apart - Chinua Achebe
ஆங்கில நாவல்கள்
அமிஷ் திரிபாதி எழுதியுள்ள Shiva Triology படித்துமுடித்துள்ளேன்.நிகழ்கால இந்திய இலக்கியவாதிகளில் பெரும் திறமை படைத்தவர் என நினைக்கிறேன்.சிவ பெருமான் பற்றிய மத நம்பிக்கைகள்,இந்தியாவின் நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும்,கதை சொல்லப்பட்டிருக்கும் முறையால் புத்தகங்களை முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது.எனது மாணவர்கள் இந்த புத்தகத்தை பற்றி கூறிய போது நம்பவில்லை,ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை.
புதன், 27 பிப்ரவரி, 2013
இன்றைய புத்தகம்
கள்ளிக்காட்டு இதிகாசம், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உலகத்தர இலக்கியம்.எளிய மனிதர்களின் வாழ்வையும்,வாழ்வின் அவலங்களையும் அழிவையும் விவரிக்கும் காவியம்.இதே போன்ற கதைக் கருக்களால் பெரும் புகழடைந்த ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா அச்சிபியின் எழுத்துக்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல நம்மவரின் படைப்பு.ஆனால் அசாதாரணமான இந்த படைப்புக்கு நாம் சாதாரண அங்கீகாரம் கூட வழங்கவில்லை.வேதனை.
சனி, 2 பிப்ரவரி, 2013
என்னைக் கவர்ந்த புத்தகங்கள் தொடர்ச்சி
1. அணிலாடும் முன்றில்- உறவுகளையும் உறவுப் பிணைப்புகளையும் பற்றிய ஒரு அழகிய படைப்பு,நா.முத்துக்குமாரின் அழகிய தமிழ் நடையில், படிப்பவரை நிச்சயம் கவரும்.
2.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணனின் வாழ்வியல் அனுபவ கட்டுரைகள், அவருக்கு மட்டுமே உரித்தான சிலிர்க்க வைக்கும் மொழி நடையில், இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு சிறந்த அனுபவம்.
3.வட்டியும் முதலும் - ராஜு முருகனின் இயல்பான நேரடியான வார்த்தைகளில் மக்களின் யதார்த்த வாழ்வை கண் முன் நிறுத்தும் நூல்.நேரடியான வாழ்வனுபவத்தை குறைவின்றி கொடுக்கும்.
4. கற்றதும் பெற்றதும் - சுஜாதாவின் விஞ்ஞானப் பார்வையில் அமைந்த படைப்பு, அன்றாட நிகழ்வுகளையும் அவர் அறிந்து கொண்ட புதியனவற்றையும் எளிய நடையில் விவரிக்கும் புத்தகம்
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியனின் தெள்ளிய கருத்து விளக்கங்களுடன் சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள்,வற்புறுத்தலான தொனியுடன் நம்மை சிந்திக்க வைக்கிறது.
6.கிமு கிபி - மதனின் வரலாற்றுப் பார்வையும் சமூக நோக்கியலும் கலந்த எழுத்துக்கள் படிப்பவர் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும்,நிகழ்வுகளயும் பிண்ணனிகளையும் ஆராய்கிறது இப்புத்தகம்.
7.சாட்சி மொழி - ஜெயமோகன் தன் கருத்தியலையும், தன் விமர்சனங்களையும், தன் மீதான விமர்சனங்களுக்கான பதில்களையும் ஆணித்தரமாக விளக்கும் புத்தகம்,இதை வாசித்தால் அவர் கொணடாடப்படுவதற்காண காரணம் புரியம்.
8.ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் -சி.மகேந்திரனின் சூழலியல் கட்டுரைகள் நம்மால் கவனிக்கப் படாத பெருங் கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரு உன்னத முயற்சி
9.ஓடும் நதியின் ஓசை - இறையன்புவின் வாழ்வியியல் கட்டுரைகள், புத்துலகிற்கு இளம் தலைமுறையை வழிகாட்டி அழைத்துச் செல்லும் விவேகமிக்க கருத்துகள் நிறைந்த புத்தகம்.
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - உலகம் கவனிக்க மறுத்த மனித இனம் அவமானப் பட வேண்டிய மனிதப் பேரவலத்தை சி.மகேந்திரன் தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார்

திங்கள், 28 ஜனவரி, 2013
என்னைக் கவர்ந்த புத்தகங்கள்
1.அணிலாடும்முன்றில் - நா.முத்துக்குமார்
2.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
3.வட்டியும் முதலும் - ராஜு முருகன்
4.கற்றதும் பெற்றதும் - சுஜாதா
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன்
6.கிமு. கிபி - மதன்
7.சாட்சி மொழி - ஜெயமோகன்
8. ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் - சி.மகேந்திரன்
9.ஓடும் நதியின் ஓசை - வெ.இறையன்பு
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - சி.மகேந்திரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)