வியாழன், 17 ஏப்ரல், 2014

இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்



இட்லி சட்னி சாம்பார் மற்றும் அரசியல்

தமிழ்நாட்டின் அரசியல் நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப் படுவது, நாட்டின் செல்வாக்கு மிக்க கட்சிகள் என்று கருதப்படும் எந்தக் கட்சியும் இங்கு முன்னணியில் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை செல்வாக்கான கட்சிகள் என்றால் அது அதிமுக வும் திமுக வும் தான். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தங்களை தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகள் போட்டியிடும்.ஆனால் இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. தேசிய கட்சிகள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கின்றன. தம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், தமக்காக போராடும் கட்சிகள் என்று தமிழன் நம்புவது திராவிட கட்சிகளைத்தான். ‘ என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே ‘ என்று அம்மாவும் கலைஞரும், வைகோ வும் விஜயகாந்தும் விளிக்கும் போது புளங்காகிதப் பட்டுப் போகிறான் தமிழன்.திராவிட அரசியல் இட்லியும் சாம்பாரும் போல தமிழர் வாழ்வியலில் கலந்து விட்ட ஒன்று. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தமிழகத்தில் திரவிட அரசியலின் செல்வாக்கை குறைக்க முடியாது.   

அரசியல்



இன்று விகடன் இணைய தளத்தில் ஒரு நகைச்சுவை படித்தேன். அதாவது நடிகர் கார்த்திக் கட்சி உடைந்ததாம். தமிழ் நாட்டில் பல பேருக்கு அவரது கட்சி பெயரே தெரியாது என்றாலும் மனம் தளராமல் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கூட்டணி சேர்ந்ததிலேயே அவரது கட்சியின் பலம் உங்களுக்கு புரிந்திருக்கும். காங்கிரஸ் கட்சித் தலைவர்களே பிரச்சாரம் செய்யத் தயங்கும் நேரத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரம் செய்வதிலேயே அவரது அரசியல் ஞானமும், தொலை நோக்குப் பார்வையும் அனைவருக்கும் புரிந்தது. தான் நடத்திவரும் நாடாளும் மக்கள் கட்சி என்ற மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியிலிருந்து தானும் விலகுவதாக கார்த்திக் அறிவிக்கவிருக்கும் அந்த அரிய நாளுக்காக காத்திருக்கிறேன். 


திங்கள், 7 ஏப்ரல், 2014

கேப்டனுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டது மக்களே!!

தமிழக பாஜக வின் மற்றுமொருசொதப்பல், நீலகிரி தொகுதி வேட்பாளர் சான்றுகளை சரியாக இணைக்காமல் விட்டதால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மிக மோசமான வகையில் தேர்தலை சந்திக்கிறது தமிழக பாஜக,மோடி மந்திரம் பலித்தால்,கூட்டணி கட்சிகள் உதவினால் மட்டுமே,இவர்களது மரியாதையை காப்பாற்ற முடியும். அதிமுக மற்றும் திமுக வின் அதிரடி அரசியலுக்கு முன்னால் தமிழக பாஜக ஒரு கத்துக்குட்டிதான்.அடிப்படையான முன்னேற்பாடுகள் கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் இவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது விந்தை.எப்படியோ கேப்டனுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டது மக்களே!!இந்த கட்சியை கூட்டணியில் சேர்த்து,சட்டமன்றத் தேர்தலில் நிற்கலாம்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தமிழ் குரல்: வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe)

தமிழ் குரல்: வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe): மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆப்ரகாம் நடித்து தயாரித்துள்ள இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தமிழ் நாட்டிலுள்ள பல...

வருகிறார் மீண்டுமொரு நீதிமான் ( Madras Cafe)

மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆப்ரகாம் நடித்து தயாரித்துள்ள இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தமிழ் நாட்டிலுள்ள பல இயக்கங்கள் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையை பிண்ணனியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  இத்திரைப்படம் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இதுபோல எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் தமிழகத்தில் விடுதலைபுலிகளுக்கான ஆதரவையோ, தனி ஈழத்துக்கான ஆதரவையோ துளியும் பாதிக்காது என்றாலும் வட இந்தியாவிலும் மற்றும் உலகெங்கும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தி மொழி பேசும் மக்களிடம் தவறான அரைகுறை புரிதலை உருவாக்கும் என்பது கவலை அளிக்கிறது.வட இந்திய ஊடகங்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் கலைத்துறையினர் என அனைவரும் தமிழ் மக்களின் உணர்வுகளை சிறிதும் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி தொடர்ந்து தமிழ் உணர்வுகளை புண்படுத்துவது பெரும் ஆபத்திற்கு இட்டுச் செல்லலாம். தேச நலன் தேச ஒற்றுமை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக கொண்ட இந்த கும்பல்களுக்கும் மும்பை நிழலுலக தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்பு ஊரறிந்த ரகசியம்.இவர்கள் இந்தியாவைக் காக்கும் தியாகிகளாம், தமிழர்கள் தீவிர வாதிகளாம், நல்ல கற்பனைதான். இந்த நீதிமான்கள் ராஜீவ் கொலையால் அதிகம் ஆதாயமடைந்தது யார் என்பதையும் பதிவு செய்தால் இவர்களை பாராட்டலாம்.ஒட்டுமொத்த உலகும் இனப்படுகொலைக்காக இலங்கையை கண்டித்த போது கொழும்பு நகரில் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் கலை வளர்த்த அறிவு ஜீவிகளல்லவா இவர்கள்! தமிழில் தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை படத்திற்கு ஏற்பட்ட தடங்கல்களும் இடைஞ்சல்களும் மெட்ராஸ் கபே வுக்கு ஏற்படாதது இந்த படம் ஒரு அரைவேக்காட்டு அதிமேதாவித்தன பிதற்றல் தானோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கிறது. காத்திருப்போம்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

காலித் ஹுசைனியின் ( Khaled Hosseini ) ஆப்கானிஸ்தான்

காலித் ஹுசைனியின் ஆப்கானிஸ்தான்


சமகால இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவர் எழுதிய A Thousand Splendid Suns, The Kite Runner, And The Mountains Echoed ஆகிய மூன்று புத்தகங்களும் அழிவின் வேதனையால் துவழும் ஆப்கானிஸ்தானின் அவலங்களை கண்முன் நிறுத்துகின்றன. ஆதிக்க போரில் ஈடுபடுவோரின் வாதங்களையோ,எதிர்ப்பவர்களின் வாதங்களையோ சார்ந்திருக்காமல்,போரால் அல்லல் படும் அப்பாவி மக்களின் அவலத்தை கண்முன் கொண்டு வருகிறது இவரது எழுத்து.தெளிந்த மொழிநடை மற்றும் நிகழ்கால மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதை அமைப்பும் இவரது சிறப்புகள்.  


சினிமா விமர்சனம்

சென்னை எக்ஸ்பிரஸ்

கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்திலும் சொதப்பி மரண மொக்கையான ஒரு படத்தை எடுத்துவிட்டு விளம்பரம் செய்து படத்தை ஓட்டி விடலாம் என நினைக்கும் யுடிவி நிறுவனத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.முத்து படத்தில் நாம் பார்த்த காமெடி,மறறும் பல தெலுங்கு படங்களின் சண்டை காட்சிகள் என மூன்றாந்தர படங்களை விட கேவலமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குப்பை படத்தில் இலங்கை, டீசல் கடத்தும் தமிழர்கள் என்று அரசியல் அலசும் அரைவேக்காட்டு பிதற்றல்கள் வேறு.
அட கடவுளே,இதற்கெல்லாம் நிறைய விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இந்தியில் இந்த படம் பிரமாண்ட வெற்றியாம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என்று ஊடகங்கள் கணிக்கின்றன. என்ன ரசனையோ போங்க.
இந்த படத்திற்கு எனது மதிப்பீடு :   குப்பை