இன்று விகடன் இணைய தளத்தில்
ஒரு நகைச்சுவை படித்தேன். அதாவது நடிகர் கார்த்திக் கட்சி உடைந்ததாம். தமிழ் நாட்டில்
பல பேருக்கு அவரது கட்சி பெயரே தெரியாது என்றாலும் மனம் தளராமல் காங்கிரஸ் கட்சியுடன்
அவர் கூட்டணி சேர்ந்ததிலேயே அவரது கட்சியின் பலம் உங்களுக்கு புரிந்திருக்கும். காங்கிரஸ்
கட்சித் தலைவர்களே பிரச்சாரம் செய்யத் தயங்கும் நேரத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணி
அமைத்து பிரச்சாரம் செய்வதிலேயே அவரது அரசியல் ஞானமும், தொலை நோக்குப் பார்வையும் அனைவருக்கும்
புரிந்தது. தான் நடத்திவரும் நாடாளும் மக்கள் கட்சி என்ற மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியிலிருந்து
தானும் விலகுவதாக கார்த்திக் அறிவிக்கவிருக்கும் அந்த அரிய நாளுக்காக காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக